பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்!
மனிதர்கள் எப்படி எல்லாம் மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களின் ஏழ்மையை, இயலாத தன்மையை காரணம் காட்டி எல்லாம் அவர்களை பயன்படுத்தலாம் என நினைத்து விடுகின்றனர். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது.
திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி வசித்து வந்த அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 27 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மணிகண்டன் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் மூலம் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, அந்த மணிகண்டன் அந்தச் சிறுமியின் குடும்பத்தில், வரிவசூல் செய்வதற்காக அடிக்கடி வீட்டுக்குச் சென்று வந்ததாகவும், அப்போது அந்தச் சிறுமி குடும்பத்தின் எளிமையைக் கருதி அடிக்கடி பிரியாணி கொடுத்து பழகி வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. சமீபத்தில் அவரை திருமணம் செய்துகொள்ள மணிகண்டன் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மனமுடைந்த சிறுமி அவரது உறவினர்களோடு, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதன் காரணமாக தற்போது மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது அந்த சிறுமிக்கு 17 வயதுதான் அப்போது அந்த சிறுமியை 15 வயதில் இருந்தே அந்த மணிகண்டன் தனக்காக திருமணம் செய்து கொள்கிறேன் என ஏமாற்றி வந்துள்ளார்.