வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளித்த பெட்ரோல் டீசல் விலை!

0
109

இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது நம்முடைய நாட்டில் அதிக வரிகளைச் செலுத்துவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தான் என்று தெரிவிக்கிறார்கள். அந்த வரியை குறைப்பதற்காக நாம் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி விதி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்த நடவடிக்கையை மத்திய அரசு ஒத்திவைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் நாட்டில் தற்போது நூற்றுக்கு 75% அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சி புரிகிறது. அது தனித்தோ அல்லது கூட்டணியிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இப்படி ஒரு பதிலை தெரிவிப்பது முறையல்ல என்று பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அத்துடன் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். .ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட அது தொடர்பாக அவர் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம். இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.இந்த நிலையில், இன்றைய தினம் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 98 ரூபாய் 88 காசுக்கும் டீசலின் விலை லிட்டருக்கு 92 ரூபாய் 89 காசுக்கும், விற்பனை ஆகி வருகிறது.

Previous articleவிரைவில் வருகிறது சூப்பர் வேக்சின்! ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ்களுக்கு ஆப்பு வைக்க திட்டம்!
Next articleமுக்கிய நபருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று! பெரும் கவலையில் சசிகலா!