விரைவில் வருகிறது சூப்பர் வேக்சின்! ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ்களுக்கு ஆப்பு வைக்க திட்டம்!

0
66

இந்தியாவில் கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இந்த நோயினை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்ற நிலையில் தான் இருந்து வருகிறது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாகவே நோய்த்தொற்று பரவல் முதல் அலையின்போது மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது இந்தியா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றத் தொடங்கினார்கள். அதன் காரணமாக, நோய் பரவல் முடிவுக்கு வந்தது ஆனால் தற்சமயம் இதன் இரண்டாவது அலை இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்த நிலையில், தற்போது இந்த வைரஸ் டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் என்று உருமாறி அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் அனைத்துவகையான கொரோனா வைரஸ்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் வாக்ஸிங் ஒன்றை கண்டுபிடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா மாகாணத்தில் இருக்கின்ற மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சூப்பர் வாக்சின் என்று குறிப்பிடப்படும். ஹைபிரிட் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் தொற்றின் மிக ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பலவகைகளுக்கு எதிராக ஆண்டிபயாடிக்குகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குகிறது. என்று தெரிவிக்கப்படுகிறது. எலிகள் மீதான பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோய் தொற்று வராமல் தடுப்பதுடன் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்த்தொற்றை உருவாக்கும் வைரஸ்கள் மட்டுமல்லாமல் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி கூடிய வாய்ப்பு இருக்கின்ற மற்ற கொரோனவைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை உண்டாக்கும் விதமாக தடுப்புமருந்து வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தடுப்பு மருந்து அடுத்த வருடத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.