ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை
இந்தியாவில் தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் கார்டில் உள்ள தங்கள் முகவரியை இணையதளம் மூலமாக ஆன்லைனில் எளிதாக மாற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் குடியுருப்பவர்களுக்கு மத்திய அரசால் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் ஆகும்.தற்போதைய சூழலில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இந்தியாவிலிருக்கும் குடிமக்களின் தனிமனித அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு விவரங்கள் உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கேஸ் இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, பான் கார்டு, செல்போன் சிம் கார்டு வாங்க மற்றும் மத்திய மாநில அரசுகளின் நல திட்டங்களின் கீழ் சேர மற்றும் உதவி தொகைகளை பெற ஆதார் கார்டு அவசியமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள கூட ஆதார் கார்டை வைத்து பதிவு செய்வது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி கொள்ள ஆதார் மையம் அவ்வபோது பல புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஆதாரில் உள்ள முகவரியை இணையதளம் மூலமாக ஆன்லைனில் மாற்றிக் கொள்ளும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆதார் முகவரி மாற்றும் வழி முறைகள் ;
- முதலில் uidai.gov.in/ssup/என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு Proceed to Update Aadhaar என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
- அதில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- பிறகு உங்கள் மொபைல் மூலம் OTP எண்ணை பெற வேண்டும்.
- ‘Address Update’ என்பதில் மாற்ற வேண்டிய முகவரியை பதிவு செய்யவும்.
- இந்த முகவரிக்கு தான் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உங்களுக்கு தபாலில் வரும்.
- இவ்வாறு முகவரியை பூர்த்தி செய்த பிறகு, உங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலுள்ள வகையில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து SUMBIT கொடுக்கவும் , பிறகு உங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் (Update Request Number URN) வழங்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணைக் கொண்டு உங்களின் கோரிக்கையின் படி முகவரி மாற்றப்பட்டதா இல்லையா என்பதை இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.