முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

Sakthi

நோய்தொற்று காலத்தில் பள்ளிகளில் பயின்று வரும் அனேகமாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக, பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள் அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவிற்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் சார்பாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மதுரையைச் சார்ந்த முத்துச்செல்வம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் நோய்தொற்று காலத்தில் எல்லா பள்ளி கல்லூரிகளிலும் நோய்த் தொற்று பரவல் அதிகம் இருக்கும் என்பதால் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், இணையதள வகுப்புகள் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். ஆனாலும் அரசுப் பள்ளிகளை பொருத்தவரையில் இந்த இணையதள வகுப்புகளிலும் பங்கேற்பதில் மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.

அனேக மாணவர்கள் தங்களுடைய குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை முறையாக பராமரித்து அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இருந்தாலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்பில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதிகாரிகள் முறையாக கணக்கெடுக்காத காரணத்தால், மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதிகாரிகள் சரியாக கணக்கெடுப்பு நடத்தினால் உண்மையான நிலை என்ன என்பது வெட்ட வெளிச்சமாகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்திய 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இதில் கிராமங்கள், ஊரகப்பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முறையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டும் எந்தவிதமான பலனும் இல்லை என்று சொல்லி இருக்கின்றார்.

எங்களுடைய மனுவின் அடிப்படையில் கல்வி பயில்வதை பாதியில் நிறுத்திய 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொண்டு அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அந்த மனுதாரர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில் இந்த வழக்கு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சார்பாக நான்கு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள் விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.