இரவு முதலே காத்துக் கிடந்த பொதுமக்கள்! மலைத்துப் போன சுகாதாரத்துறை அதிகாரிகள்!

0
75

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய தினம் 111 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் இரவு நேரத்தில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொது மக்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் எல்லோரும் இரவிலேயே குவிய தொடங்கி விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. டோக்கன்கள் அடிப்படையிலேயே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற நிலை இருந்த போதிலும் பல இடங்களில் தள்ளுமுள்ளு உண்டாவதால் காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் இருக்கின்ற 60 வார்டுகளில் தினந்தோறும் 20 வார்டுகளில் விதமாக சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. நேற்றையதினம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பிபி அக்ரஹாரம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வீரப்பன் சத்திரம், சுப்ரமணிய கவுண்டர் வலசு, குமலன்குட்டை மாநகராட்சிப் பள்ளி, சம்பத் நகர் அம்மன் பள்ளி, முனிசிபல் காலனி சத்துணவு கூடம், இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, போன்ற 20 மையங்களில் நோய் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகாலையிலிருந்து இந்த மையங்களில் குவிய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு முதலே வந்திருக்கிறார்கள். அவர்கள் காலணிகளையும், கற்களையும் வைத்து இடம்பிடித்து காத்திருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மையங்களிலும் 200 பேருக்கு டோக்கன்கள் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதேபோல மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, பவானி கோபி, போன்ற மாவட்டம் முழுவதிலும் 111 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.