நெஞ்சை ரணமாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!

0
123

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மீது வெள்ளை இன போலீசார்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் பிற வெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்துவது, அடித்துக்கொல்வது, துன்புறுத்துவது, உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அடுத்து ஒருவரின் இழப்பு சம்பவம்தான் அமெரிக்காவையே மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் என்ற நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீசார் மடக்கி பிடித்தார்கள். ஆனால் அவர் காரில் ஏற மறுத்தார். அப்போது ஒரு போலீஸ்காரர் ஜார்ஜை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார்.

அப்பொழுது ஜார்ஜ் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டார். ஜார்ஜ் எவ்வளவு கெஞ்சியும் போலீசார் அவர் மீது வைத்த காலை எடுக்க வில்லை. இதனால் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிறவெறியால் ஜார்ஜ் கொல்லப்பட்டதால் இழப்புக்கு நீதி வேண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

இதனால் ஜார்ஜின் உறவினர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்பதற்கு போலீஸின் மீது வழக்கு தொடர்ந்தனர். அதனால் அவரைத் தாக்கிய 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து பணி நீக்கம் செய்து கைது செய்யப்பட்டார்கள்.

இப்பொழுது தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜார்ஜ் கழுத்தை அழுத்தி கொன்ற டெரிக் சாவின் குற்றவாளி என்று உறுதியானது. அதனால் அவருக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் இந்த கொடூர சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டிய டார்னெல்லா பிரேசியர் என்ற அந்தப் பெண் எடுத்த வீடியோ தான் இப்பொழுது ஆதாரமாக பேசப்படுகிறது. அதற்காக அந்த பெண்ணிற்கு மிக உயர்ந்த புலிட்சர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அந்த வீடியோ தான் ஜார்ஜ் வழக்கிலும் நீதி வாங்கிக் கொடுத்துள்ளது.

Previous articleஅமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!
Next articleபூஜா ஹெக்டே ட்விட்டரில் போட்ட பதிவு! குஷியான விஜய் ரசிகர்கள்!