பதிவாகியது! டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் பலி!

0
212

கொரோனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி பதிவாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர், அதாவது டெல்டா பிளஸ் பாசிட்டிவ் வந்த சென்னையை சேர்ந்த 32 வயதுடைய செவிலியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் நலமுடன் உள்ளனர், என்று மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மதுரையை சேர்ந்த அவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர் டெல்டா வைரசால் உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூற்றுபடி மகாராஷ்டிராவில் அதிகபட்சம் 20 பேரில் டெல்டா பிளஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸுக்கு ஒருவர் பலியாகி உள்ளனர். மொத்தம் இந்தியாவில் 48 பேர் புதிய வகை டெல்டா பிளஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Previous articleமக்களே கவனம் தேவை! டெல்டா பிளஸ் வைரஸ்க்கு மஹாராஷ்ட்ராவில் முதல் உயிரிழப்பு பதிவு!
Next articleசேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here