மக்களே கவனம் தேவை! டெல்டா பிளஸ் வைரஸ்க்கு மஹாராஷ்ட்ராவில் முதல் உயிரிழப்பு பதிவு!

0
88

நாடு முழுவதும் கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்பொழுது டெல்டாப் பிளஸ் வைரஸ் தனது வேலையை காட்டி வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கமேஸ்வரர் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு டெல்பிளஸ் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வேறு ஏதேனும் உடல்நிலை பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது..

இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் 20 பேரை டெல்டா பிளஸ் கொரோனா பாதித்துள்ளது.

இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அம்மாநிலம் அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் மகாராஷ்டிரா தான். கட்டுக் கடங்காமல் சென்றதை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த இடத்தில் மெல்ல மெல்ல தளர்வுகள் கொடுத்த நிலையில் இப்போது மூன்றாவது வகை கொரோனா வேகம் எடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு புதிய உருமாறிய டெல்பிளஸ் கொரோனாவும் மகாராஷ்டிராவில் கூடுதலான சிக்கலை உருவாக்கி உள்ளது. எனவே மூன்றாம் நிலை ஏற்படும் என அஞ்சப்படுவதால் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக சிவசேனா அரசு அறிவித்துள்ளது. புதிய டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவுவதாக தகவல்கள் வந்த நிலையில் நுரையீரலை எளிதாக தாக்குவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Kowsalya