தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து முக்கிய தகவல் – அமைச்சர்!

0
118

கொரோனா பரவல் மிகவும் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா அதிகமாக இருந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

முதல் அலை ஓரளவுக்கு குறைந்து வரும் பொழுது நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் அலை தாக்கியதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணவர்களின் அடுத்தகட்ட படிப்புக்கு பன்னிரண்டாம் வகுப்பு மிகவும் முக்கியமானது. அதனால் தேர்வு நடக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்த அரசு கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதால் அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் செய்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தொடர்பாக மு க ஸ்டாலின் அவர்கள் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதில் கிடைக்கும் மதிப்பெண்கள் திருப்தி இல்லை எனில் கொரோனா குறைந்த பின் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும். அதில் கலந்து கொள்ள விருப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுதி அந்த மதிப்பெண்ணை இறுதி மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலில் பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகு தான் அவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகுதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் பள்ளிகள் திறக்க இப்போதைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தெரிய வருகிறது.

Previous articleசேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Next article2 மாதத்திற்குப் பின் தொடங்கும் பேருந்து போக்குவரத்து! எந்தெந்த மாவட்டத்திற்கு எத்தனை பேர் தெரியுமா?