எந்த நாடும் இதை செய்ய முடியாது! அனுமதிக்கவும் முடியாது – சீன அதிபர் ஜின்பிங்!
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தியானன்மென் சதுக்கத்தில் நடந்தது. இந்த விழாவை சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் தொடங்கிவைத்தார். அந்த விழாவில் உரையாற்றிய ஜி ஜின்பிங் கூறியது இதுதான்.
தன்னம்பிக்கை காரணமாக சீன மக்கள் வலிமையானவர்களாக திகழ்கின்றனர். சீனாவை அடிமைப்படுத்தும் காலம் நிறைவு பெற்றுவிட்டது. எந்த நாட்டையும் நாம் அடிமைப்படுத்தியது கிடையாது அடக்கியதும் இல்லை, அடக்குமுறைகளை ஏவியதும் இல்லை. கடந்த காலங்களிலும் இதனை தான் செய்தோம், தற்போதும் இதையே செய்கிறோம், எதிர்காலத்திலும் இதுவே தொடரும். அதேபோல் எந்த வெளிநாட்டு சக்திகளும் சீனாவை அடக்கவோ, அடக்குமுறைகளை ஏவவோ, அல்லது அடிமைப்படுத்தவும் அனுமதிக்க முடியாது.
அவ்வாறு செய்ய முயல்பவர்கள் 140 கோடி மக்கள் கொண்ட இரும்பு சுவர் முன்னர் ரத்தக்களறி சந்திப்பார்கள். தலை குனிவு ஏற்படும். ராணுவத்தின் மீதான கட்சியின் கட்டுப்பாடுகள் தொடரும். ஹாங்காங் மீதான உரிமையை நிலைநாட்டி உள்ளது.தைவானும் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தேசிய இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க சீன மக்களின் உறுதியான உறுதிப்பாடு, உறுதியான விருப்பம், மற்றும் சக்தி வாய்ந்த திறனை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது.
சீன மக்கள் பழைய உலகை அழிப்பதில் நல்லவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஒரு புதிய உலகத்தையும் உருவாக்கியுள்ளனர். நாம் இப்போது எல்லா வகையிலும் சீனாவை ஒரு சிறந்த நவீன சோசலிச நாடாக கட்டியெழுப்புவதற்கான, இரண்டாம் நூற்றாண்டு இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறோம் என கூறினார்.