அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவருக்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி பணம் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பொதுமக்கள் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பும் பொழுது மாற்றி அனுப்பி விடுவார்கள். பின் வங்கியை தொடர்பு கொண்டு அது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை காண்பித்து அந்த பணத்தை நமது அக்கவுண்டிற்கு திருப்பி அனுப்புவார்கள் ஆனால் இங்கு நடந்ததே வேறு. அதற்கு நாம் படாத பாடு படுவோம்.
வங்கியே ஒருவருக்கு தவறுதலாக பணத்தை மாற்றி அனுப்பியுள்ளது.
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 3.7 லட்சம் கோடி.
அமெரிக்காவில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றில் டேரன் ஜெனரல் என்பவரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி சென்றுள்ளது. தவறுதலாக வந்த வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று குறுஞ்செய்தி வந்ததும் அதனை பார்த்துக் கொண்டிருந்த நொடி பொழுதே மொத்த பணமும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது.
அதில் எவ்வளவு ஹீரோக்கள் உள்ளன என்பதை நான் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே பணம் போய்விட்டது. எனது வாழ்வில் இதுவரை இவ்வளவு பணத்தை நான் கண்டதில்லை . ஜீரோக்களை பார்க்கும் பொழுது எனவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது எனது வங்கியில் 110 டாலர்கள் மட்டுமே உள்ளன, என அவர் தெரிவித்துள்ளார்.