கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவை சொன்ன அமைச்சர்!

0
80

தமிழகத்தில் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் சற்று குறைந்த பொழுது டிசம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மறுபடியும் இரண்டாவது அலையால் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில் மாணவர்களின் சேர்க்கை குறித்து கல்லூரிக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

 

நேற்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மாணவர்களின் சேர்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் மற்ற விபரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக வெளியிட்ட செய்தியை பற்றிய ஆலோசனை நடத்த நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

கொரோனா பரவல் வெகுவாக குறைந்து உள்ள நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும் , மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் கல்லூரி செயல்படுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனை நடந்தது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதனால் பேட்டி ஒன்றில் பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் கல்லூரிகளில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளி கல்லூரிகளில் தொடர்ந்து பள்ளிகளும் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Kowsalya