திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

0
157

மாண்புமிகு அம்மா கடந்த பத்து வருடங்களாக விவசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கு நினைத்து அவர்கள் விவசாயி வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார். தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதை அவர்களுக்கு குறித்த காலத்தில் விதைகள் வழங்கப்படாததால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது, மாண்புமிகு அம்மா அவர்கள் வழிவந்த அரசு கடந்த ஆண்டு குறித்த நாளில் அதாவது ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டது. அதை டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக முழுமையாக ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டும் அதே போல் தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களும் சலுகைகள் மற்றும் உதவிகளை வேளாண் பெருமக்களுக்கு அளித்து வருகிறது அதிமுக அரசு. கடந்த 10 ஆண்டுகளில் அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையும் குறித்த காலத்தில் தரமான விதை நெல் மணிகளை அனைவருக்கும் வழங்கப்படவில்லை, என்று நடவு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வரகூரை சேர்ந்த விவசாயி திரு வீரமணி தனது ஒன்பது ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் தனியாரிடமிருந்து a36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு ஏக்கருக்கு செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்ததாகவும், ஏறத்தாள விதைத்த 12 நாட்களில் திமுக அரசு வழங்கிய விதை நெல் மணிகள் முளைக்க வில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த விவசாயி வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் மிகவும் பாதிப்படைந்து உள்ள விவசாய வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் எனவும், மேலும் வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை தெரிவித்துள்ளார்.

அதே போல் வேறு எங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து உள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு எதிர்காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல் மணிகளை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஎங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!
Next articleதேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!