பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!
இந்த செய்தியை பார்க்கும் போது இதெல்லாம் கூடவா செய்வார்கள், கடத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் இதையெல்லாம் கடத்துகிறார்கள். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை கடத்தி அதன் மூலம் சிலர் லாபம் பார்க்கின்றனர். அவர்களையெல்லாம் நாம் என்னவென்று கூறுவது. அவைகளை தேசவிரோதிகள் என்று தானே கூற வேண்டும்.
வாருங்கள் இந்த செய்தியை பற்றி பார்க்கலாம். சென்னையில் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பார்சலில் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பல கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் ரகசியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணையும், தீவிர பரிசோதனையும் மேற்கொண்டனர்.
அப்போது விமான நிலையத்தில் உள்ள தபால் பிரிவிற்கு வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த பார்சல்கள் போலந்து நாட்டிலிருந்து வந்தவை. அந்த பார்சல்களை சோதனை செய்தபோது 107 மருத்துவ குப்பிகளின் மூலம் சிலந்திகள் மறைத்து வைத்து , அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வகை சிலந்திகள் வட மற்றும் மத்திய அமெரிக்காவிலும், மெக்சிக்கோ நாட்டிலும் மட்டுமே வாழக் கூடியவை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிலந்திகளை மீண்டும் போலாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பார்சல்கள் யாருக்கு வந்தவை என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.