கைதி 2 பட படப்பிடிப்புகளுக்கு கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரவியது அடுத்து டிரீம் வாரியர் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம் எங்கள் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதை இயக்கத்தில் வெளிவந்த கைதி இத்திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்பந்தமாக ஊடகங்கள் எங்களை தொடர்பு கொண்டு செய்தியைக் கேட்டு வருகின்றனர்.
ஆனால் அந்த வழக்கின் விவரங்கள் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எங்களுக்கு கிடைக்காததால் அதைப்பற்றி எங்களால் எதுவும் கூற முடியாது. அதேபோல் கைதி சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை நாங்கள் உறுதியாக மறுக்கவோ சட்டப்படி நிரூபிக்க முடியும் என்பதை தெளிவு படுத்துகிறோம்.
அதுமட்டுமின்றி மேலும் ஒரு சில ஊடக நிறுவனங்கள் இந்த செய்தியைப் பற்றி முழுவதும் தெரியாமல் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். தங்களது பத்திரிக்கை தர்மத்தை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.