கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை!
நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத் தீவின் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபகாலத்தில் நியமித்தது. அதன் பிறகு இவர் மேற்கொண்ட சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகள், மற்றும் பல லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இவரை திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவிலும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. கேரள சட்டசபையில் லட்சத்தீவு நிர்வாகியை திரும்பப் பெற வேண்டும் எனவும், சட்டசபையின் மூலம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த இடதுசாரி அமைப்புகள் லட்சத்தீவு வருவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் காங்கிரஸ் எம்பிக்கள் குழுவுக்கு அனுமதி தரவும் லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் மறுத்தது.