மனம் உடைந்த இளைஞர் அணித் தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் எம்எல்ஏ வாக பொறுப்பேற்றுள்ளார். அவர் எம்எல்ஏ வாக பொறுப்பேற்றதிலிருந்தே அவர் தனது கடமைகளை நன்றாகவே செய்து மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளார். வருங்கால இளைஞர்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்மாதிரியாக இருந்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்.
இவரின் பனி பொறுப்பை கண்டு இவருக்கு அமைச்சர் பொறுப்பு அல்லது மேயர் பதவியை கூட கொடுக்கலாம் என கட்சிக்காரர்களே சொல்லும் அளவுக்கு சேப்பாக்கம் தொகுதியை சுற்றி வருகிறார் உதயநிதி. இந்த நிலையில் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அமைப்பாளராக உள்ளார் வேளாங்கண்ணி. இருதய நோயாளியான அவரின் கணவருக்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் உள்ளது என்பதால் மருத்துவச் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் உள்ளார். எனவே சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அமைப்பாளர் வேளாங்கண்ணியின் கணவரை நேரில் சென்று நலன் விசாரிக்க அவரின் வீட்டுக்கு சென்றார் உதயநிதி.
அங்கு சென்று பார்த்த உதயநிதிக்கு ஒரு அதிர்ச்சி கார்த்திருந்தது. அதற்கான காரணம் வேளாங்கண்ணி ஒரு குடிசை வீட்டில் வசித்து வருகிறார் என்பதாகும். வேளாங்கண்ணி இத்தனை வருடமாக கட்சிக்காக உழைத்த மகளிர் அணி அமைப்பாளர், இவர் இப்படிப்பட்ட வீட்டில் தங்கி உள்ளார் என்ற அதிர்ச்சியில் வீட்டுக்குள் சென்றார். உடல்நலம் குன்றிய வேளாங்கண்ணியின் கணவரை சந்தித்துப் பேசிய உதயநிதி மனம் உடைந்து பேசினார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள் நான் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று கூறி, நீங்கள் இந்த கட்சிக்காக உழைத்தவர்கள், உங்கள் தேவைகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை என்று கூறி உள்ளார். இந்த செயல் திமுக தொண்டர்களுக்கு புதுவித தெம்பும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது.