கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!

0
178
The young man who died on the way to the temple due to a tragic incident!
The young man who died on the way to the temple due to a tragic incident!

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!

சென்னையில் சானிடோரியம், காமாட்சி நகரை சேர்ந்தவர், மணிகண்டன். 28 வயதான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் மகாலிங்கம் என்பவரை அழைத்துக்கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமியை பார்க்க சென்றுள்ளார். இவரின் வயது 34 ஆகும். சாமி தரிசனம் முடித்து மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருவள்ளூரை அடுத்த திருவாரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே திருத்தணி நோக்கி வேகமாக வந்த மினி வேன் ஒன்று, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் நிலைகுலைந்து போய்கீழே விழுந்த நிலையில், பலத்த காயம் அடைந்த மணிகண்டன் மற்றும் மகாலிங்கம் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார். அதில் காயமடைந்த மகாலிங்கத்தை மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் ரத்தினகுமார் என்பவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். இவருக்கு வயது 55 ஆகும்.

இந்த மாதிரி விபத்துக்கள் நடக்காமல் இருக்கத்தான் அரசு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், யார் கேட்கிறார்கள். அனைவரும் அதை வாங்கி ஷோகேசில் வைப்பது போல வைத்துக் கொண்டு சுற்றுகின்றனர்.

Previous articleநர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000!
Next articleமது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!