நிலைகுலைந்த ஜப்பான், மீட்பு பணிகள் தீவிரம்!

0
94

டோக்கியோ – கடந்த வாரம் ஜப்பானை சூறையாடிய சூறாவளி, வீடுகளை சேற்றில் புதைத்து மக்களை கூரைகளில் சிக்கித் தவிக்கவைத்தது.

ஆபத்தான பூகம்பங்கள், சுனாமி மற்றும் எரிமலைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால் ஆபத்தில் சிக்கியுள்ள ஒரு நாட்டில் மக்களின் பாதுகாப்பு உணர்வைத் நிலைகுலைய செய்வதாகவே இப்புயலின் தாக்கம் அமைந்துள்ளது.

டோக்கியோவிற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செவ்வாயன்று (இன்று) மீட்பு முயற்சிகள் தொடர்ந்தன.

நாகானோ, புகுஷிமா, மியாகி மற்றும் பிற மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் டஜன் கணக்கானவர்கள் இறந்துள்ளனர், மேலும் பல பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் சுமார் 100 பேருக்கும் மேல் காயமடைந்தனர்.

நாகானோவில் ஒரு டிப்போவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 ஷின்கன்சன் ரயில்கள், ஒவ்வொன்றும் 12 கார்களைக் கொண்டவை சேதமடைந்ததாக கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் யுஜி இஷிகாவா தெரிவித்தார்.

வண்டிகளுக்கு அடியில் உள்ள மின்னணு உபகரணங்கள் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தீவிரமான சூறாவளி, புவி வெப்பமடைதல் மற்றும் நிலச்சரிவு குறித்து விஞ்ஞான சமூகம் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறது.

“சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கான செய்தி என்னவென்றால், அனைவரும் எதிர்காலத்தில் இன்னும் வலுவான புயலுக்கு தயாராக வேண்டும்” என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலின் இயக்குனர் கிறிஸ் பீல்ட் கூறினார்.

“காலநிலை மாற்றத்தின் விளைவாக புயல்கள் வலுவடைந்து வருகின்றன என்பதற்கான ஆதாரங்களை புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டியது அவசியம், மேலும் பேரழிவு தடுப்பு முதலீடுகள் முன்னெப்போதையும் விட இப்போது இன்னும் மேம்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

ஜப்பான் ஏற்கனவே அதன் வயதான மற்றும் போதிய அளவு பராமரிக்கப்படாத உள்கட்டமைப்பு நெருக்கடியில் உள்ளது. பூகம்பங்கள் மற்றும் பிற பேரழிவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேம்பட்ட தரங்களை பூர்த்தி செய்ய சுரங்கங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை புதுப்பித்து மாற்றுவதற்கான நிதி மற்றும் மனிதவளத்தை அரசாங்கங்கள் கொண்டிருக்கவில்லை.

அதற்கு மேல், ஆரம்ப எச்சரிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர உதவுவதற்கும் அவசர தேவை உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

பல மில்லியன் மக்களை பாதிக்கும் பகுதிகளுக்கு வெளியேற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், பல்லாயிரக்கணக்கானவர்களில் மிகக் குறைவானவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்தனர்.

ஜப்பானியர்கள் பேரழிவு அபாயங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் அவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு அரசாங்கத்தை நம்புவதற்குப் பதிலாக சொந்தமாகத் கையாள வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மியாகி ப்ரிபெக்சர், செண்டாயில் உள்ள தோஹோகு பல்கலைக்கழகத்தின் பேரழிவு நிபுணரும் பேராசிரியருமான ஹிரோகி மருயா கூறுகையில், பேரழிவுகளைக் குறைக்க ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல அணைகள் கட்டியது.

“இந்த நாட்களில், நாங்கள் ஒரு பெரிய சூறாவளியை ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டிருக்கிறோம், பல காலங்களாக வெள்ளம் வராத இடங்கள் இப்போது வெள்ளத்தில் உள்ளன,” என்றும் அவர் கூறினார்.

கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு ஜப்பான் திரும்பும் என்று முடித்தார்.

author avatar
Parthipan K