மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

0
141
Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!
Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும்  ஏற்படாமல் இருந்தது.

இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி அவர் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று முன்தினமும் அமித்ஷா பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார்.

விரிவாக்கப்பட்ட புதிய மந்திரிசபை நேற்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. நேற்று மாலை இதை அறிவித்த நிலையில் இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.வேல்முருகன் மத்திய மந்திரி ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் மூலம்  தமிழக பாஜக தலைவர் முருகனின் பெயர் 42 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறியிருந்தது.

பாஜக தலைவர் முருகன் மத்திய மந்திரி ஆகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர் மந்திரியாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன்! இந்தக் கட்சியிலா இணையபோகிறார்!!!
Next articleஇமாசல பிரதேச முன்னாள் மந்திரி வீரபத்ர சிங் மறைவுக்கு காரணம் இதுதான்! மருத்துவர் வெளியிட்ட அறிக்கை!