இமாசல பிரதேச முன்னாள் மந்திரி வீரபத்ர சிங் மறைவுக்கு காரணம் இதுதான்! மருத்துவர் வெளியிட்ட அறிக்கை!

0
71

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் தன்னுடைய 87 வது வயதில் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சில நாட்களாகவே உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.

அவர் இறந்ததற்கு காரணம் கொரோனா என வதந்திகள் பரவின. இதுபற்றி சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஜனக் ராஜ் கூறும்போது, கடந்த ஏப்ரல் 30ந்தேதி எங்களுடைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் காலமானார் என கூறியுள்ளார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்து உள்ளார். எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு நீரிழிவு மற்றும் பிற சுகாதார குறைபாடுகளும் இருந்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் சுவாச கோளாறு ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தார் என மருத்துவர் ஜனக் ராஜ் கூறியுள்ளார். இவர் கொரோனாவால் இறந்தார் என பரவிக் கொண்டிருக்கும் வதந்தி உண்மை இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

author avatar
Parthipan K