கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்!
கின்னஸ் புக்கில் இடம் பெற வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பை நாம் பெற்றிருக்கவேண்டும். ஒருவர் பெற்றிருக்கும் சாதனையை முறியடிக்க நாம் பல முயற்சிகளை செய்து அதில் வெற்றி பெற வேண்டும். அந்த குறிப்பிட்ட செயலை செய்வதற்கு பலமுறை பயிற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கால நேரத்திற்குள் நாம் செய்யும் சாகசம் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும்.
தற்போது வங்காளதேசத்தின் அருகே ஒரு கிராமத்தில் உள்ள ராணி என்ற பசு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. காரணம் இதுதான் வாருங்கள் பார்க்கலாம். வங்கதேச தலைநகர் டாக்கா அருகில், 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரிகிராம் என்ற கிராமத்தில், உள்ள ஷிகோர் என்பவரின் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது.
அதை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டுள்ள அந்த பசு ஐம்பத்தி ஒரு சென்டிமீட்டர் நீளம், மற்றும் 26 கிலோ கிராம் அதாவது 57 பவுண்டுகள் மட்டுமே எடை உள்ளது. இந்தப் பசு தான் தற்போது உலகிலேயே மிக குள்ளமான பசு என கூறப்படுகிறது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில், அது 61 சென்டிமீட்டர் இருந்ததும், தற்போது ராணி பசு அதைவிட பத்து சென்டிமீட்டர் குறைவாக ஐம்பத்தி ஒரு சென்டிமீட்டர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.
பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி இந்த பசுவை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்த பசுவுடன் செல்பி எடுத்து அவர்களது இணைய தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என அந்த உரிமையாளர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்பு காரணமாக நாடு தழுவிய போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் டாக்காவில் இருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாரிகிராமில் உள்ள பண்ணைக்கு மக்கள் ரிக்க்ஷாக்கள் மூலம் திரண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.