பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா?
கொரோனா தொற்றானது கடந்த இரு ஆண்டுகாளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இத்தொற்றானது சீனா நாட்டில் முதலில் தொடங்கி நாளடைவில் அனைத்து நாடுகளுக்கு பரவியது.கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவு பாதித்தது.அதன் இரண்டாம் அலையில் மற்ற நாடுகளுக்கு பாதிப்பு குறைந்த வண்ணமகதான் இருந்தது.ஆனால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.அதுமட்டுமின்றி பல உயிர் சேதங்களையும் சந்தித்தது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் இன்றியும்,போதுமானளவு மருத்துவ வசதிகள் இன்றியும் காணப்பட்டது.இதனால் பல லட்சக்கணக்கில் உயிர்களை இழக்க நேரிட்டது.அத்தோடு கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி வரவழைக்கப்பட்டது.ஆனால் நாளடைவில் தடுப்பூசியும் தட்டுப்பாடாக மாறியது.முதலில் மக்கள் தடுப்பூசி போட முன் வரவில்லை என்றாலும்,உயிர் சேதம் அதிகளவு நடைபெறுவதை பார்த்து மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வந்தனர்.
அந்தவகையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டும்,அரசாங்கம் கூறும் நடவடிக்கைகளை கடைபிடித்தால் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து தற்பொழுது சிறிதளவு மீள முடிந்தது.அதுமட்டுமின்றி மத்திய மாநில அரசுகளும் மக்கள் நலன் கருதி பல நலத்திட்டங்களை அமல்படுத்தினர்.அத்தோடு தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை காப்பாற்றினர்.
அரசாங்கம் கொடுத்த விழிப்புணர்வு காரணமாக மக்கள் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி தட்டுப்பாடக உள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.அவர் கூறிய ஓரிரு நாட்களிலேயே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு முகாம்கள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.மூன்று நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பை கேட்ட மக்கள் நேற்று அதிகாலை முதலே தடுப்பூசி முகாம்களில் டோக்கன்கள் பெற்றுக்கொண்டு காத்துக் கொண்டிருந்தனர்.நேற்று டோக்கன் பெற்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.முகாம்கள் திறக்கப்பட்டு ஓர் நாளிலேயே அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்த காரணத்தினால்,இன்று மாநகராட்சி தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஒன்றிய அரசானது போதிய தடுப்பூசிகள் தற்போது வரை வழங்கவில்லை.அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளது.மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.