தூத்துக்குடி: தமிழக அமைச்சர்களை திருடர்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது, அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற்ற பிரச்சாரத்தில், கலந்து கொண்ட சீமான், ராஜீவ் காந்தி கொலையை பற்றி பேசிய பேச்சு கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அவரது கொலை நியாயமான ஒன்று தான் என்று பேசியிருந்தார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அவரது கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந் நிலையில் சீமான் மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை பேசியிருக்கிறார். தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற திரைப்படம் போல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். என்ன, இப்போது அம்மா இல்லை, திருடர்கள்தான் உள்ளனர் என்றார்.
இதனிடையே, பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, விக்கிர வாண்டியில் சீமான் பேசியது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டரான, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.