இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவு உயிர் சேதங்களையும் சந்தித்து விட்டோம்.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் பாதிப்புகள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் முதலில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.தொற்று சிறிது குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை ஏற்படுத்தினர்.
அதனையடுத்து குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக காணப்பட்டதால் தளர்வுகள் ஏதும் கூறாமல் முழு ஊரடங்கை அம்மாவட்டங்களுக்கு மட்டும் அமல்படுத்தினர்.அம்மாவட்டங்களிலும் தொற்று குறைந்ததால் தளர்வுகளுடைய ஊரடங்கை தற்போது அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளது.அதனால் அந்த மாவட்டங்களில் முழு தளர்வை ஏற்படுத்தி தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளை ஏற்படுத்தியும் மக்கள் பொது விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதாக ஒன்றிய சுகாதரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி தற்போது இந்தியாவில் கப்பா வைரஸ் என ஒன்று இருவருக்கு உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.இந்த கப்பா வைரஸ் டெல்டா வைரஸை போன்றதே மிகவும் ஆபத்தானவையே என தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து தற்போது கேரளாவில் முழு தளர்வுகளை அமல்படுத்திய பிறகு மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் இரு நாட்களுக்கு கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.தற்போது கேரளா மாநிலத்தில் ஏற்பட்டது போல தமிழகத்திற்கும் அந்நிலை வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.தற்போது வரை கோவையில் 401 பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அமைத்துள்ளனர்.அதேபோல் சென்னையில் 244 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது.நாகப்பட்டினத்தில் 2,தருமபுரியில் 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது.