திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்!! அமைச்சர் பேட்டி!!

0
146

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். உணவுக்கு பின் உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை மிக முக்கியம் என்று அவர் கூறி உள்ளார்.

எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் விழாவில் அமைச்சர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இன்று 4:45 மணி அளவில் கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டு, மெரினா கடற்கரையில் நிறைவுசெய்தார்.

21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பங்கேற்று தனது இலக்கை நிறைவுசெய்தார். அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நான் 21 கிலோ மீட்டர் ஓடும் 129 வது மாரத்தான் இது என்றார். வருங்காலத்தில் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் .

அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான போட்டிகள் மறுக்கப்பட்டன. ஆனால், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திமுக சார்பில் போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் டெங்குவின் தொடர்ச்சிதான் ஜிகா.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களை தான் நோய் தாக்குகிறது. எனவே, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Previous articleமுதலமைச்சரின் தலைமைச் செயலக ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து!!
Next articleஅமாவாசை நாளில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!