சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொங்கு நாடு என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற ஆலோசனையை கூறியிருந்தார்.ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பலரும் தற்போது கொங்கு நாடு கோரிக்கையை பெரியதாக பேசுவது திசை திருப்பும் அரசியலாகவே பார்க்கபடுகிறது.

குறிப்பாக திமுக ஆட்சியமைத்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தது.இது தேசிய அளவில் பிரிவினையை தூண்டும் வகையில் இருந்ததால் இதற்கு பதிலடியாக தமிழகத்தில் மாநில பிரிவினையை தூண்டும் வகையில் கொங்கு நாடு கோரிக்கையை கிளப்பியுள்ளதாக யூகிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.

எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment