ஜல்னா: காந்தி என்கிற ஒரு குடும்பத்தை போற்றுவது தான் காங்கிரசின் தேசப்பக்தி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இரு கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.
அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். ஜல்னா, அகோலா மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தேசத்துக்கு வழிகாட்டிய துணிச்சல் மிக்கவர்களை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. தேசியம், தேசப்பற்று என்பது அந்த மாநிலத்தில் அதிகம் உண்டு.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு இந்த உணர்வுகள் இல்லை. தேசியவாதம் பற்றி காங்கிரஸ் பேசுபவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை.
காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக அது பார்க்கிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, தேச நலனுக்கானது. காங்கிரசின் இளம் தலைவர்களும் அதைத் தான் சொல்லியிருக்கின்றனர்.
அந்த கட்சிகளின் தொண்டர்கள் கூட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டதை வரவேற்றுள்ளனர். அனைத்து தரப்பினரும் வரவேற்றாலும், எதிர்க் கட்சிகள் அதை ஏற்கவில்லை.
மக்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். காஷ்மீர் மக்களும் இந்திய தாயின் மக்கள் என்பதே. எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் மரணத்தோடு போரிட்டு வருகின்றனர் என்றார்.
மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.