டெல்லி:தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அகில இந்திய வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியிருக்கிறது. இந்த காலம் தான் தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் காலமாகும்.
தற்போது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும்.
புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.