குர்திஷ் மக்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

0
224

துருக்கி இராணுவம் சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு சிரியாவில் உள்ள மக்களை குர்திஷ் பாதுகாப்பு படை எனும் போராளிகள் அமைப்பு அந்த எல்லையை பாதுகாத்து வருகிறது.

தனிநாடு வேண்டி போராடி வரும் இந்த அமைப்பு, துருக்கி எல்லையில் அடிக்கடி தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இந்த தனிநாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அரசு, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் உள்ள குர்திஷ் போராளிகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கடுமையான தாக்குதல் இப்பிரிவினரிடையே நடந்து வருகிறது. இதுவரை 600 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Previous articleகுப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி
Next articleபிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி