சென்னை: 5 சதவீத அகவிலைப்படி உயர்வால், தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய அடிப்படையில் அகவிலைப்படி 9ல் இருந்து 12 சதவீதமாக கடந்த ஜனவரியில் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 14ம் தேதி ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படியை 12ல் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை அதே போன்று, 5 சதவீதம் அதிகரித்து உத்தரவிடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் முழுநேரமாகப் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
பகுதி நேரமாகப் பணிபுரிவோருக்கு அகவிலைப் படி உயர்வு பொருந்தாது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள் உளளிட்டோருக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும். அதன்படி, 18 லட்சம் பேருக்கு பயன் கிட்டும். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்சம் ரூ.11,250 வரை ஊதியம் உயரும். ஓய்வூதியர்களுக்கு ரூ.450 முதல் ரூ.5,575 வரை ஓய்வூதியம் அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.