கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா?
கூகுள் நிறுவனம் என்பது உலகம் முழுவதும் தற்போது உபயோகம் செய்து வருகிறோம்.இந்த கூகுளில் எதை பற்றி தெரியவில்லை என்றாலும் தேடியவுடன் கிடைக்கும் தேடுபொறி அமைப்பு ஆகும்.இந்த நிறுவனம் தக்க விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடக்கப்பட்டுள்ளது.
அதாவது,கூகுள் மற்ற நாட்டின் செய்திகளை பயன்படுத்துவதற்கு அவர்களுடன் சம ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.தற்போது கூகுள் நிறுவனம் அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.அந்தவகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏஏப்பி,ஏபிக்,எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காமல் இருந்துள்ளது.பொதுவாக செய்தி ஊடகங்களில் செய்திகளை பயன்படுத்தும் போது அந்நிறுவனங்களுக்கு உரிய பங்கை கொடுத்திட வேண்டும்.ஆனால் கூகுள் நிறுவனமோ உரிய பங்கை கொடுக்காமல் இருந்துள்ளது.அதாவது கூகுள் நிறுவனம் மற்ற நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்திய போது நெய்பரிங் ரைட்ஸ் என்ற அடிப்படையில் கொடிக்கப்பட வேண்டிய பணத்தை அந்நிறுவனங்களுக்கு தர வில்லை.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு கூகுள் நிறுவனம் ஒற்றுக்கொள்ள வில்லை.மேலும் கூகுள் நிறுவனம் சமரச பேச்சுக்கும் முன் வரவில்லை.அதனால் பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனம் 500 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.இந்த அபராதத்தை பிரான்ஸ் நாட்டின் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம் அபராத தொகையை தர மறுத்தாலோ அல்லது ஏதும் பதில்கள் சொல்ல தவறினாலோ தற்போது உள்ள அபராத தொகையை காட்டிலும் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.இதற்கு பதிலாக கூகுள் நிறுவனம் கூறியதாவது,அனைத்து நாட்டின் செய்தி நிறுவனங்களிடமும் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வருகிறோம்.நாங்கள் உங்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பதர்க்குள் இவ்வாறு அபராதம் விதிப்பது ஏமாற்றத்தை தரும் வகையில் உள்ளது எனக் கூறியுள்ளனர்.