முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி!
தமிழகம் முழுவதும் வருடம் வருடம் நீட் தேர்வுக்கான பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது.இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் பலமுறை கோரியும் மத்திய அரசு எந்தவித பதிலும் தரவில்லை.அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுதலிலும் மத்திய அரசு கர்நாடகாவிற்கும் ஆதரவு தெரிவிப்பதால் நாம் கேட்கும் கோரிக்கைகள் எதற்கும் செவி சாய்ப்பது இல்லை.தற்போது தமிழகம் முழுவதும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகவும் வாய்ப்புள்ளது என சுற்று வட்டாரங்கள் பேசியும் வருகின்றனர்.
அதனையடுத்து இப்பொழுது பரபரப்பாக இரு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி மத்திய அரசிடம் கூறிவருகிறது.அதில் ஒன்று தான் நீட் தேர்வு.நம் தமிழ்நாட்டின் வணிக ரீதியாகவும் ,மாணவர்களின் முழு உழைப்பிற்கும் மருத்துவப் படிப்பு கனவாகவே தற்போது மாறியுள்ளது. இதனை ஒழுங்கு முறை செய்ய மேற்கொண்டு மாணவர் மற்றும் மாணவியர் இடையே நீட்தேர்வு நடப்பது பற்றிய பாதிப்புகளை கூறும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டது.இந்த குழுவினரிடம் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யிடம் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்கள் வந்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அந்த குழு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.ஆனால் அதிமுக அரசும் இந்த குழு அமைப்பு வெறும் கண்துடைப்பு தான் என்று கூறி வந்துள்ளனர்.தற்போது இந்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல இந்த பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வை விளக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பாஜக ஏற்கும் என இவ்வாறு கூறினார்.
இவ்வாறு கூறியவர்களே தற்போது வழக்குத் தொடுத்துள்ளனர்.சென்னை உயர் நீதிமன்றமும் விளம்பரத்திற்காக எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யக் கூடாது என்று கூறியது.மேலும் பாஜக அளித்த மனுவை தள்ளுபடி செய்தது.இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.நீட் விளக்கு பெறுவதில் திமுக அரசு சரியான திசையில் செல்கிறது என்பதை இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தி உள்ளது.நாடகம் ஆடியதை தவிர நீட் தேர்வில் சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத அதிமுக தலைவர் பழனிசாமிக்கும், தமிழ்நாட்டுக்கு பச்சை துரோகம் இழைக்கும் பாஜகவுக்கும் கிடைத்த நெத்தியடி இது என கூறியுள்ளார்.