அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

0
119

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் அவர்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரும் வழியை தடை விதிக்கக்கோரி விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கூறியதாவது, நாங்கள் சமூக நீதிக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்கள் இந்த மாதிரியான வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நடிகர்கள் அனைவரும் ரியல் ஹீரோக்கள் ஆக இருக்க வேண்டும். மற்ற மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நடிகர்களை பார்த்து இளைஞர்கள் மற்றும் மக்கள் அவர் என்ன செய்கிறாரோ அதையே செய்ய நினைக்கும் மக்கள் இருக்கும்பொழுது வரியை செலுத்தாமல் இருப்பது வேறு பாதைக்கு கொண்டு செல்லும். வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்திற்கு சமம். எனவே இரண்டு வாரங்களுக்குள் உரிய அபராதத்தையும் அதற்குரிய வரியையும் விஜய் செலுத்த வேண்டும். என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அந்த காருக்கு இறக்குமதி நுழைவு வரி ரூ 1.6 கோடியை அவர் செலுத்தவில்லை. இதனால் அவரது காரை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் பதிவு செய்யவில்லை. எனவே அந்த அபராதம் முதல்வரின் பொது நிதிக்கு செலுத்த வேண்டும், என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.

 

2012ல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க தடை விதிக்கக்கோரி விஜய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

 

இந்த வழக்கில் நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் ஆவார்.

 

இவர் அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க ஆணையிட்டவர் ஆவார். அனைத்து அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் படி உத்தரவிட்டு அதேபோல்தான் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று தனது அறையில் கேமரா பொருத்தி கொண்டு செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அணியின் வீரர்கள் பாதுகாப்பிற்காக பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
Next articleவிரைவில் பாரதிய ஜனதாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு! பரபரப்பான பாரதிய ஜனதா கட்சி!