மேகதாது அணை! இன்று டெல்லி செல்கிறது தமிழக அனைத்து கட்சி குழு!

0
124

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகிறது காவிரி ஆறு இந்த நதியானது கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த காவிரி ஆற்றில் இருக்கும் நீரைக்கொண்டு தான் தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஒருவேளை அந்த நதியில் இருந்து தமிழகத்திற்கு நீர் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக தமிழகம் விவசாயத்தில் ஒரு மிகப்பெரிய சரிவை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், காவிரி ஆற்றின் நீரை தமிழகத்திற்கு தருவதற்கு அரசு நீண்டகாலமாக முரண்டு பிடித்து வந்ததுஇந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டில் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையத்தின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை வருடாவருடம் தற்போது கர்நாடக அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது

இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்ட முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் பல அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து கலந்து ஆலோசிக்க சென்ற 12ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு ஒன்று திரட்டியது.

தமிழக அரசு கூட்டிய இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்று உரையாற்றினார்கள். கூட்டத்தின் முடிவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை நீர் சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது

Previous articleஸ்டாலினை முதல்வர் ஆக்கிய கையோடு பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்த அடுத்த பிராஜெக்ட்!
Next articleமாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!