மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!

Photo of author

By Hasini

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!

கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். 37 வயதான இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவருக்கு வயது 35 கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 10 ம் தேதி ஆடைகள் களைந்து அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விவரங்களை தெரிந்து கொண்டனர். மல்லிகாவிற்கு 18 ஆண்டுகளுக்கு முன் வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். உறவினர்கள் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். குழந்தைகள் பிறந்த பின்னர் மல்லிகாவிற்கு முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து விட்டார். இதனை அடுத்து பொள்ளாச்சி வடக்கு பாளையத்தில், ஐந்து ஆண்டுக்கு முன் வசித்து வந்தபோது, ஓட்டலில் வேலை செய்த பாண்டியராஜன் உடன் தொடர்பு ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன் பாண்டியராஜன் மல்லிகாவை தொண்டாமுத்தூர் அழைத்து வந்து கோவிலில் தாலி கட்டியுள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மல்லிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாண்டிய ராஜன் தலைமறைவாகிவிட்டார். இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அவரது சொந்த ஊரில் வைத்து அவரை கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து அவரை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். மேலும் மல்லிகாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், மல்லிகாவை நான் உல்லாசமாக இருக்க அழைத்தபோது உன்னால முடியாது. உனக்கு ஆண்மை போயிருச்சு. பேசாம படுத்து தூங்கு, என கேவலமாக என்னை பேசினாள். அதன் காரணமாக ஆத்திரம் மேலிட அவளது கழுத்தை நெரித்து விட்டேன்.

அப்போது அவள் மயங்கிவிட்டாள். இதனை அடுத்து அவள் இறந்தது கூட தெரியாமல் உல்லாசமாக இருந்தேன். காலையில் தூங்கி எழுந்து பார்த்தபோது அவள் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனே நான் ஆட்டோவில் வந்து, சொந்த ஊருக்கு, பேருந்து ஏறி சென்று விட்டேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு  போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.