கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!!

Photo of author

By CineDesk

கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!!

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சுவாரியர், பாடகன் டிஜே, நடிகார் கருணாஸ் மகன் கென் கருணாஸ், மற்றும் பலர் நடித்து வெளியான படம் அசுரன். அந்தப் படம் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் அசுரன் படம் தமிழ் திரையுலகிலேயே மிகப்பெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படம் தெலுங்கில் நரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில், நடிகர் வெங்கடேஷ், நடிகை பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள செய்தியை அறிந்த வெங்கடேஷ் ரசிகர்கள் காட்டும் கோபத்திற்கு ஆளாகினர். மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் தான் ஒளிபரப்ப வேண்டும் என்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை முன்னிட்டு தியேட்டரில் படம் வெளியிட அரசு தடை செய்துள்ளது. அதனால் வேறு வழி இல்லாமல் தான் பட குழு ஓடிடியில் வெளியிடுகிறது.

மேலும் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் வெங்கடேஷ் நரப்பா படத்தை ஓடிடி வெளியிடுவதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் வேறு வழி இல்லாததால் தான் ஓடிடி வெளியிடும் நிலைமையில் உள்ளோம். ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதால் உலகம் முழுவதிலும் உள்ள பல லட்சம் மக்கள் படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் வரவேற்பைப் பெறும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் நரப்பா படத்தின் டிரைலருக்கு இணையதளத்தில் 11 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. இதனால் படக் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.