முதல் முறையாக ஒரு கோடி ஃபாலோவர்ஸ்களை சேகரித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?? குவியும் பாராட்டு!!

முதல் முறையாக ஒரு கோடி ஃபாலோவர்ஸ்களை சேகரித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?? குவியும் பாராட்டு!!

தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தனது சினிமா வாழ்க்கையை தவிர வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பில் இருப்பார்கள். அதில் சிலர் தனது அன்றாட வேலைகளையும் அல்லது அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதும், அவ்வப்போது அவர்கள் நடிக்கும் படங்களை பற்றிய தகவல்களை தெரிவிப்பதுமாக வலைதளத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார்கள்.

அந்த வகையில் தமிழில் பல படங்களை நடித்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கிய நடிகர் தனுஷ். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற பல மொழிகளில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று பெருமளவில் போற்றப்பட்டு வருகிறார். இவர் அண்மையில் நடித்த படம் ஒன்று தமிழ் சினிமா ரசிகர்களால் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் அண்மையில் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து முடித்துள்ளார். ஆனால் அந்த மூன்று படங்களும் இன்னும் வெளியாகவில்லை. இந்தி மற்றும் இங்கிலீஷில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தமிழில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படி உலகம் முழுவதும் இவரின் ரசிகர்கள் இவருக்கு பேராதரவை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரின் சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் இவரை பின்பற்றி வருகின்றனர். தற்போது டுவிட்டர் பக்கத்தில் இவரை 10 மில்லியன் அதாவது ஒரு கோடி மக்கள் பின்பற்றி வருகின்றனர். முதல் முதலில் ஒரு கோடி பின்தொடர்பாளர்களை சேகரித்த தமிழ் சினிமா நடிகர் என்னும் பெருமை நடிகர் தனுசையே சாரும். இந்த செய்தி வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது.

Leave a Comment