அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா எப்படி இருக்காங்க?? இத நீங்களே பாருங்க!!

அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா எப்படி இருக்காங்க?? இத நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி தொகுப்பாளினிகள் உள்ளனர். அதிலும் சிலர் மட்டுமே பிரபலமாக இருப்பார்கள். தமிழில் முன்னணி தொலைக்கட்சியாக இருப்பது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் பணிபுரியும் சிலர் உலகளவில் பிரபலம்  அடைந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி க்கு சென்று பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சி வந்திருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

இவர் ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் தான் பணிபுரிந்தார். பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சென்று அங்கு சில வருடம் பணியாற்றி வந்தார். அதில் அர்ச்சனா பிரபலமானார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அர்ச்சனா மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை மாகாபா உடன் இணைந்து அர்ச்சனாவும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதில் தனது மூலைப்பக்கத்தில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்கு அவரின் ரசிகர்கள் பலர் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம் உங்களுக்கு சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறியிருந்தனர். இந்த நிலையில் மேலும் என்னை பற்றிய தகவல்களை எனது மகள் சாரா உங்களுக்கு தெரியப்படுத்துவார் என்றும் கூறியிருந்தார். அதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்தது. அப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மாவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது என்று கூறியிருந்தார். இதற்கு பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரின் நலன் விசாரித்து  பல பதிவுகளை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து தற்போது அர்ச்சனா அவர்கள் மருத்துவமனையிலிருந்து பத்திரமாக வீட்டிற்கு வந்து விட்டதாகவும், அவர் தற்போது ஆரோக்கியமாக  இருப்பதாகவும் சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவர் ரசிகர்கள் பலர் அவர் ஆரோக்கியமாக வீடு திரும்பியதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment