மூன்றாவது நாளாக வாகன ஓட்டிகளின் வயிற்றில் பாலை வார்த்த எண்ணெய் நிறுவனங்கள்!

0
222

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த சூழலில், சென்னையில் 3-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleசர்க்கரை நோயை தடுக்க அற்புதமான காளான் ஊத்தப்பம்!! இன்றே செய்து பாருங்கள்!
Next articleஇன்று பார்க்க வேண்டிய பங்குகள்!! ஏ.சி.சி, அதானி குழு, எச்.சி.எல் டெக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here