திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மேற்கொண்டு தொடருமா அல்லது முடக்கி விடுமா? என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.ஆனால் திமுக தலைமையே அதிமுகவின் அரசில் தொடங்கப்பட்ட சில நல்ல திட்டங்களை தொடர நினைத்தாலும் அந்த கட்சியின் தொண்டர்கள் அதை ஏற்று கொள்வதாக தெரியவில்லை.அந்த வகையில் தான் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்கும் நாளே அதிமுக அரசின் சார்பில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் பல்வேறு இடங்களில் உடைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திமுக தலைமையும் அதிமுக தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மெத்தனம் காட்டி வருகிறது.இதை குறிப்பிட்டு தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த காவிரி உபரி நீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் அதிமுக அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த சிவி.சண்முகம் தன்னால் தொடங்கப்பட்ட திட்டத்தை கிடப்பில் போட்ட திமுகவை எதிர்த்து நீதி மன்றம் வரை சென்றுள்ளார்.
அதாவது கடந்த அதிமுக ஆட்சியில் திருவள்ளூர் பல்கலைகழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைகழகத்தை உருவாக்க அரசானை பிறப்பிக்கப்பட்டது.இந்த பல்கலைகழகத்திற்கு முன்னாள் முதல்வரான டாக்டர் ஜே ஜெயலலிதா பல்கலைகழகம் என பெயர் சூட்டப்பட்டது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரத்தில் உள்ள பழைய வட்டாச்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.அரசாணையின் படி உடனடியாக விழுப்புரத்தில் பல்கலைகழகம் திறக்கபட்டதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு இந்த பல்கலைகழகம் செயல்படாமல் முடக்க சதி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.இதனையடுத்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இந்த பல்கலைகழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், “பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும்” குற்றம்சாற்றியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது