சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு பணமில்லாமல் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் நிதி ஆதாரம் இல்லாமல் நின்று இருப்பதால் முக்கிய பணிகளை பட்டியலிட்டு அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்களை அறிவித்து அதற்கான டெண்டர் விட்டு நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், அந்த கட்சியை சார்ந்தவர்கள் அந்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார்கள். நாங்கள் எதையுமே கைவிடவில்லை நிதி ஆதாரம் ஏற்பட்டவுடன் ஒவ்வொரு பணியாக உடனடியாக நடக்கும். தற்சமயம் முக்கிய பணிகளை முதலில் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் கே என் நேரு.
அதேபோல டெண்டர் மட்டும் விட்டுவிட்டால் எந்தவிதமான பயனும் ஏற்பட்டுவிடாது. நிதி இருந்தால்தான் பணிகளை ஆரம்பிக்க இயலும் நிதி ஆதாரம் வந்தவுடனேயே ஒவ்வொரு பணியாக ஆரம்பிக்கப்படும். மாநகராட்சியில் இருக்கின்ற வட்டங்களில் சரியான விகிதத்தில் வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கின்ற திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக மீதும், திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக மீதும் இந்த டெண்டர் விஷயங்களில் மாறி, மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதே வேலை ஆகிவிட்டது என்று மக்கள் பெரிய அளவில் சலித்துக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த திமுக அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை வைத்து டெண்டர் விட்டு அதன் மூலம் தமிழகத்தில் பல பகுதிகளில் இருக்கின்ற ஆறுகளில் மணல் அள்ளும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக அதனை மிகக் கடுமையாக எதிர்த்தது. இருந்தாலும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுக ஆட்சிக் காலம் முடியும் வரையில் அந்த மணல் குவாரிகள் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது.ஆனாலும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அந்த மணல் குவாரிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கினர்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக திமுக சார்பாக தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.இப்படி ஒருவர் பின் ஒருவராக மாறி, மாறி குற்றம் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருப்பதன் காரணமாக, பொதுமக்கள் இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.