ராசாளியை பந்தயத்திற்கு அழைத்த தல அஜித் குமார்!! காடு மேடாக சுத்தும் தல!!

Photo of author

By CineDesk

ராசாளியை பந்தயத்திற்கு அழைத்த தல அஜித் குமார்!! காடு மேடாக சுத்தும் தல!!

தென்னிந்திய தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் தல அஜித் குமார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் அஜித் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். மேலும் இவரை தீனா திரைப்படத்திற்கு பிறகு தல என்றும் அழைத்து வருகின்றனர். அஜித்குமார் பொதுவாக கார் பந்தயங்களில் அதிகம் பங்கேற்பார். இவர் பைக் ஸ்டன்ட் செய்து அவ்வப்போது தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வார். மேலும் போர்பஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித்குமார் ஆறாவது இடத்தை பெற்றிருந்தார். அதையடுத்து 2014 ஆம் ஆண்டு பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51வது இடத்தை பிடித்தார். மேலும் 2013ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமார் ஆவார்.

அஜித் குமார் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தமிழ் தந்தைக்கும் சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடை நிறுத்திக் கொண்டார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் இவர் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டு வருவார். இதனால் அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இவர் தற்போது நடித்து வெளியான விவேகம் திரைப்படத்தில் பைக் ஸ்டாண்ட் பல செய்திருப்பார். அவருக்கு பைக் ஸ்டாண்ட் செய்வது மிகவும் பிடிக்கும். மேலும் அவருக்கு பைக் ரெய்டு செய்வதும் பிடித்த விஷயம். இந்த நிலையில் அண்மையில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் காட்சியைப் போல் பைக்கை எடுத்துக்கொண்டு தற்போது உலாவருகிறார். இவர் பைக் ரேட் செய்யும் புகைப்படம் வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் வலைதளங்களில் பகிர்ந்து வைரலாகி வருகின்றனர்.