தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் அதிமுகவின் சார்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் இருக்கின்ற போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக ஓபிஎஸ் மற்றும் திமுக சார்பாக தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். இதில் தங்கத்தமிழ்செல்வன் ஐ விடவும் கூடுதலான வாக்குகளை வாங்கி ஓபிஎஸ் வெற்றியடைந்தார்.
இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ் வெற்றியடைந்தது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் நிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஓபிஎஸ் வெற்றியில் சந்தேகம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதற்கு முன்னதாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்ற சூழலில், பன்னீர்செல்வம் மீது அவர் மீண்டும் வழக்கு தொடர்ந்து இருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.