ஒரே இரவில் இந்திய அணியின் கதாநாயகனாக மாறிய தீபக் சஹர்!

0
105

ஒரே இரவில் இந்திய தேர்வு குழுவினரின் மனதை அசைத்துப் பார்த்திருக்கும் வீரர் தீபக் சாகர். இந்தியாவிற்கு எதிராக ஜூலை மாதம் 20ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அவ்வளவு எளிதாக மறப்பதற்கான வாய்ப்பில்லை. அப்படி ஒரு தோல்வியை அந்த ஆட்டத்தில் இலங்கை அணி சந்தித்திருக்கிறது.

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு பேட்டிங் செய்த இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இருந்து மீண்டு வந்து போட்டியை வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எட்டாவது வரிசையில் களமிறங்கிய தீபக் சஹர் தான். அவர் 69 ரன்கள் விளாசி போட்டியை வெற்றிபெற வைத்திருக்கிறார். அவர் வெறும் போட்டி மற்றும் வென்று கொடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவையும் பதட்ட படுத்தியிருக்கிறார். அவர்களின் யோசனையை மாற்றி அமைத்து இருக்கின்றார் தீபக் சஹர்.

இந்திய அணியில் தற்சமயம் நிலவிவரும் வறட்சியின் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது ஒரு ஆல்ரவுண்டர் என்ற இடத்தில் இருக்கும் ஆட்கள் தேவை. அதாவது இந்திய அணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச வேண்டும் குறைந்தது 40 ரன்கள் அடிக்க வேண்டும் ஹர்திக் பாண்டியா இதை நிரப்பி வந்த வீரராகவே பார்க்கப்பட்டார். ஆனால் விதி அவருடைய முதுகு வலியின் வடிவில் வந்து விளையாட தற்சமயம் 3 ஓவர் முழுவதுமாக பந்து வீசுவதற்கு அவர் மூச்சு வாங்கி விடுகிறார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் தீபக் சாஹர் நான் இருக்கிறேன் என்று சூசகமாக தன்னுடைய 69 ரன்கள் இன் மூலமாக வெளிப்படுத்தி இருக்கின்றார். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். அவர் 82 பந்துகளில் வரையில் எதிர்கொண்டு கிட்டத்தட்ட முழுவதுமாக 14 அவர்கள் பேட்டிங் செய்து இருக்கின்றார். ஒருநாள் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளரின் அபாரமான ஆட்டம் இது என்று சொல்லப்படுகிறது. பயிற்சியாளர் டிராவிட் அனைத்து பந்துகளையும் சந்தித்து விளையாடு என்று தெரிவித்து அனுப்பி இருந்ததால்தான் அவர் நன்றாக பேட்டிங் செய்து விடவில்லை என்று சொல்கிறார்கள். அவருடைய சில ஷாட்கள் தவிர்த்து அனேக ஷாட்கள் நன்றாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது.

இவை அனைத்தும் தேர்வுக் குழுவை யோசிக்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் தீபக் சாகர் இடம் நல்ல பேட்டிங் இருக்கின்றது என்பதை புரிய வைத்திருக்கிறது. இந்த போட்டி சுழற்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தீபக் சாகரின் பேட்டிங் சற்று ஆறுதல் தருகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே பந்துவீச்சு செய்ய இயலாமல் மூன்றாவது ஓவரிலேயே முதுகை பிடித்துக்கொண்டு ஹர்திக் பாண்டியா துடித்ததை ரசிகர்கள் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினரும் கண்டார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக கூட்டி கழித்து பார்த்தோமானால் உலகக் கோப்பை டி20 மற்றும் எதிர்வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தீபக் சாகரின் வரவு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஇங்கே எந்த வேலையும் பலிக்காது! அடுத்த பயிற்சியாளரும் அவர்தான்! அதிர்ச்சியில் ராகுல் டிராவிட்
Next articleஅஸ்தமனமாகும் ஹர்டிக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கை!