பெண்ணை இதற்காக ஏமாற்றிய வாலிபர்! நீதிமன்றம் செய்த அதிரடி!

0
148
The young man who cheated on the girl for this! Court action!
The young man who cheated on the girl for this! Court action!

பெண்ணை இதற்காக ஏமாற்றிய வாலிபர்! நீதிமன்றம் செய்த அதிரடி!

கடலூர் மாவட்டத்தில், மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். 57 வயதான இவரது  மனைவி ராஜேஸ்வரி மற்றும் இவர்களது மகன் பிரபு உடன் வசித்து வருகின்றனர். பிரபுவுக்கு வயது 25 ஆகும். இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதைக் காரணமாக வைத்து அவரிடம் பிரபு பலமுறை உல்லாசம் அனுபவித்து உள்ளார். தற்போது அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் பிரபுவிடம் கூறியுள்ளார்.

அதற்கு பிரபு தனக்கு தற்போது வேலை இல்லாமல் இருப்பதாகவும், வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, அந்தக் கருவை கலைத்து விடுமாறும் கூறியுள்ளார். அதற்கான கருக்கலைப்பு மாத்திரையையும் அவரே வாங்கி கொடுத்துள்ளார். அவர் கூறியதை நம்பி அந்த பெண்ணும் மாத்திரை சாப்பிட்டு கருக்கலைப்பு செய்துள்ளார்.

அதன் பின் பிரபுவுக்கு நீதிமன்றத்தில் நிரந்தர ஊழியர் வேலை கிடைத்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்த பெண், தனது குடும்பத்தினருடன் பிரபுவின் வீட்டிற்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, கூறியதற்கு பிரபு மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அந்த இளம் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டியதோடு  மிரட்டலும் விடுத்துள்ளனர்.

உடனே இது குறித்து அந்தப் பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் காரணமாக போலீசார் பிரபு, அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவிற்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பு அளித்தார்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் அன்பழகன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனை வழங்கினார். மேலும் அபராதத் தொகையில் 30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Previous articleநுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!
Next articleமுன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு! அதிமுக தலைமை அதிரடி அறிவிப்பு!