லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி!
சென்னை ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சேர்ந்தவர், அலெக்ஸ். இவருடைய மனைவி ஆல்வின். இவருக்கு வயது 67. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர் அதே பகுதியில் பழைய தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த பொன்னுசாமி என்பவர் அவருடன் நட்பாக பழகினார்.
அவர் ஆசிரியை ஆல்வின் இடம் தங்களின் நகைகளைப் பாதுகாக்கும் லாக்கர் எங்கள் நிறுவனத்தில் ஒன்று உள்ளது. அதில் நகைகளை வைத்தால் பத்திரமாக இருக்கும் என்றும் அதற்கு வாடகை எதுவும் தர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதை நம்பி கடந்த 2019ஆம் ஆண்டு தன்னிடமிருந்த 101 பவுன் நகையை பொண்ணுசாமியிடம் கொடுத்துள்ளார். அவரும் நகைகளை லாக்கரில் வைத்து அதற்கான ரசீதை மட்டும் ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, லாக்கரின் சாவியை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆல்வின் அவருக்கு தேவைப்படும் போது பொன்னுசாமி இடம் ரசீதை காண்பித்து நகைகளை எடுத்து மீண்டும் லாக்கரில் வைத்து வந்தார். இந்த நிலையில் தன் சொந்த தேவைக்காக ஆசிரியரின் லாக்கரில் உள்ள நகைகளை எடுக்க தனியார் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது பொன்னுசாமி அங்கு இல்லை என்பதால் அதை பற்றி கேட்டபோது அவர் ஆடிட்டராக பணி உயர்வு பெற்று வேறு கிளைக்கு சென்று விட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆல்வினுக்கு சொந்தமான 100 பவுன் நகையையும், அவர் 10 பேரின் பெயரில் போலி ரசீதுகளை தயாரித்து அடமானம் வைத்து மோசடி செய்ததும் இதன் மூலம் தெரியவந்தது. மேலும் அங்கிருந்த ஊழியர்கள், நீங்கள் நகையை மீட்க வேண்டுமானால் வட்டியுடன் சேர்த்து 29 லட்சம் தரும்படி கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை இதுபற்றி காசிமேடு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் பொன்னுசாமி உட்பட 2 பேர் மீதும் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை விசாரித்து வருகின்றனர்.