தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! பெரு மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
190

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த சூழலில் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இப்படியான நிலையில், சென்னையில் 7வது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleநோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!
Next articleநடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்த பிக் பாஸ் பிரபலம்!! என்ன படம்னு தெரியுமா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here