நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்த பிக் பாஸ் பிரபலம்!! என்ன படம்னு தெரியுமா!!

0
68
Big Boss celebrity who acted opposite actor Aravindsamy !! You know what movie !!
Big Boss celebrity who acted opposite actor Aravindsamy !! You know what movie !!

நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்த பிக் பாஸ் பிரபலம்!! என்ன படம்னு தெரியுமா!!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரித்விகா. இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் சில திரைப் படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர். மேலும் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமின் இயக்கத்தில் காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார்.

அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னை பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கதாபாத்திரத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். இதை தொடர்ந்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய பா.ரஞ்சித் அவர்களின் அடுத்தப் படமான ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வெற்றியாளர் விருதை பெற்றார். இந்த நிலையில் தற்போது நவரசா என்னும் ஆந்தலாஜி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வேறு அழகான கதைகளை கூறுகிறது. இந்த கதைகளில் ஒரு பகுதியாக நடிகர் அரவிந்த்சாமி மற்றும் ரித்திகா நடித்துள்ளார். இந்தப் பகுதியில் ஒன்பது உணர்ச்சிகளில் ஒன்றான கோபத்தின் உணர்ச்சியை இக்கதை உணர்த்துகிறது. மேலும் இப்படத்தை குறித்து ரித்விகா பேசும்பொழுது அரவிந்த்சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணி புரிவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் உள்ளார். மேலும் அவரை இயக்குனராக அருகில் இருந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மேலும் சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவத்தில் அவர் பயன்படுத்திய முறையும் மிக சிறப்பாக இருந்தது என்றார்.

author avatar
CineDesk